News August 18, 2025
நெகிழி இல்லா மாவட்டம் விழிப்புணர்வு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நெகிழி இல்லா மாவட்டம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வளைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் உள்ளார்.
Similar News
News December 10, 2025
திருவள்ளூர்: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் (டிச.13) அன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள், புகைப்படம் மற்றும் விரல் ரேகை பதிவு செய்தல் போன்ற பிரச்சினைக்கு உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 10, 2025
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் (டிச.12) அன்று காலை 10 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News December 10, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூரில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (மி.பி.வ), மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையை https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் (டிச.31)க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்தார்.


