News April 17, 2024

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

மதுரை, மணியாச்சியைச் சேர்ந்தவர் நாகம்மாள்(70). இவர் நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றபோது 60-வயது மதிக்கத்தக்க ஒருவர், முதியோர் உதவித் தொகை வாங்கித்தருவதாக கூறி நாகம்மாளை நம்ப வைத்து போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். செயின் அணிந்தால் கிடைக்காது என சொல்லி கழுத்தில் அணிந்திருந்த செயினை கழட்டி பர்ஸில் வைக்க சொல்லினார். புகைப்படம் எடுத்தபோது முதியவர் பர்ஸை திருடி சென்றார்.

Similar News

News November 10, 2025

மதுரை: சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

image

மதுரை செல்லூர் இமாம் உசேன் மகன் ராஜா முகம்மது இவரது உறவுக்கார சிறுமி வீட்டிற்கு சிறு வேலைகள் செய்ய வந்த போது ராஜா முகம்மது சிறுமியிடம் நெருக்கமாக பழகியதால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுக்குறித்து சிறுமி பாட்டியிடம் தகவல் தெரிவித்தார். சிறுமியை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மகளிர் போலீசார் ராஜா முகம்மது மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

News November 10, 2025

மதுரையில் 11ம் வகுப்பு மாணவி தற்­கொலை

image

கூடல்புதூர் கோசா­குளத்தை சேர்ந்­த­வர் கார்த்திக் மகள் பேபி ஐஸ்­வர்யா(16). இவர் மதுரை நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்­தார். எந்த நேர­மும் இவர் வீட்­டில் செல்போன் பார்த்து கொண்டிருந்­ததை அவரது தாய் கண்டித்­தால் மனமு­டைந்து தனது பெட்­ரூமில் இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து
கொண்­டார். கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்­றனர்.

News November 10, 2025

மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் உள்ள அனுப்பானடி, தெப்பக்குளம் துணை மின் நிலையங்கள் நாளை (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுப்பானடி: ராஜீவ் காந்தி நகர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், சுந்தரராஜபுரம், சாமநத்தம், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, தெப்பக்குளம்: தெப்பக்குளம் தெற்கு/மேற்கு, புது ராமநாதபுரம் ரோடு, காமராஜர் சாலை, மைனர் ஜெயில், மீனாட்சி நகர், லட்சுமிபுரம் மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் மின்தடை.

error: Content is protected !!