News November 2, 2025
நீலகிரி: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்!

நீலகிரி மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க
Similar News
News November 13, 2025
உதகை ஏடிசி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

உதகை ஏடிசி நடைபாதை பகுதியில் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி தொடங்கியது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
News November 13, 2025
நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 13, 2025
கோத்தகிரி அருகே பரபரப்பு: அழுகிய நிலையில் புலி சடலம்!

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள கடசோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு, சில மீட்டர்கள் தொலைவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள், புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


