News June 17, 2024
நீலகிரி: ஸ்ட்ராபெர்ரி பழம் சீசன் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஸ்ட்ராபெர்ரி பழம் சீசன் தொடங்கி உள்ளது. நீலகிரி ஸ்ட்ராபெரி பழம் மிகுந்த சுவையாக இருப்பதால் நல்ல கிராக்கி நிலவுகிறது. தற்போது ஸ்ட்ராபெரி பழம் அறுவடை தொடங்கி உள்ளது. வியாபாரிகள் சாகுபடி நிலங்களுக்கு வந்து ஒரு கிலோ
ரூ.300 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 23, 2026
உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்து கொள்ள QR Code வெளியீடு!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீலகிரி பூச்சிப்பிடிப்பான்’ (Nilgiri Flycatcher) பறவை, வாக்காளர் விழிப்புணர்வுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பறவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை எளிதாக சரிபார்க்கும் வகையில் QR Code ஸ்கேன் வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.
News January 23, 2026
நீலகிரி: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News January 23, 2026
நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


