News August 23, 2025
நீலகிரி: வாழை தோட்டத்தை சேதம் செய்த காட்டு யானைகள்!

புளியம்பாறை பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து,வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன.
Similar News
News January 18, 2026
நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19) உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
News January 18, 2026
ஊட்டியில் அதிரவைக்கும் சம்பவம்!

ஊட்டி புதுமந்து பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவர் பொங்கல் பண்டிகைக்காகக் கர்நாடகா சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது கடையின் கதவை உடைத்து கல்லாவிலிருந்த ரூ.7,500 மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு கருவியைத் (DVR) திருடிச் சென்றுள்ளனர். நேற்று கடைக்குத் திரும்பிய ரமேஷ் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
News January 17, 2026
நீலகிரி: ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா?

நீலகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE IT!


