News November 19, 2025

நீலகிரி: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News January 18, 2026

ஊட்டியில் அதிரவைக்கும் சம்பவம்!

image

ஊட்டி புதுமந்து பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவர் பொங்கல் பண்டிகைக்காகக் கர்நாடகா சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது கடையின் கதவை உடைத்து கல்லாவிலிருந்த ரூ.7,500 மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு கருவியைத் (DVR) திருடிச் சென்றுள்ளனர். நேற்று கடைக்குத் திரும்பிய ரமேஷ் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

News January 17, 2026

நீலகிரி: ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE IT!

News January 17, 2026

BREAKING: நீலகிரியில் மண்ணில் புதைந்த 3 பேர்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒதனத்தி பகுதியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!