News June 19, 2024
நீலகிரி: மாற்று திறனாளிகளுக்கு ரூ.12 கோடி நிதியுதவி

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்று திறனாளி நல துறையின் மூலம், 2021 மே 7 முதல் இதுவரை 1,674 மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு ரூ.7 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், 937 கடும் ஊனமுற்றோருக்கு ரூ.3.71 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு ரூ.18.10 உதவி தொகையும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
BREAKING: நீலகிரியில் மண்ணில் புதைந்த 3 பேர்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒதனத்தி பகுதியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 17, 2026
நீலகிரி: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 17, 2026
நீலகிரி: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

நீலகிரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


