News March 28, 2024
நீலகிரி: மாரியம்மன் திருத்தேர் திருவிழா

கோத்தகிரி அரவேனு அருகே உள்ளது சக்கத்தா மாரியம்மன் கோயில். நேற்று (மார்ச் 27) காலை திருத்தேர் வீதிவலம் வடம் பிடித்தல் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி ஊர்வலம் சென்றது. சக்கத்தா , ஜக்கனாரை, அரவேனு சாலை என முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்று அடைந்தது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News January 16, 2026
குன்னூரில் மினி பஸ்கள் ஸ்டிரைக்

குன்னூர் ஜெகதளா வழித்தடத்தில் மினி பஸ் ஓட்டுநர் பிரவீன். இவரை ஓவர் டேக் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மினி பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக சுரேஷ், ராஜா, சண்முகம் மற்றும் சிவக்குமார் ஆகிய 4 பேர் மீது அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின் பஸ்கள் இயக்கப்பட்டது.
News January 15, 2026
நீலகிரி மாவட்ட காவல்துறை பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
News January 15, 2026
நீலகிரியில் குடும்பத்துடன் சென்ற வாகனம் விபத்து!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குறும்படி அருகே பொலிரோ வேன் விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, தாய் மற்றும் 2 குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த குன்னூர் போலீசார் மற்றும் ஹைவே ரோந்து படையினர் விரைந்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


