News October 19, 2025

நீலகிரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 14, 2025

சமூகநீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தமிழக அரசின் பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் கூறியுள்ளார். விண்ணப்பங்களை சிறுபான்மையினர் அலுவலகத்தில் பெற்று இம்மாத 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

News December 14, 2025

கூடலூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

கூடலூரில் இருந்து ஓவேலி சாலையில் சப் இன்ஸ்பெக்டர் கவியரசரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவில் வந்த பயணிகளின் உடைமையை சோதனை செய்தனர். சோதனையில் பெரிய சூண்டியை சேர்ந்த துர்கா சுந்தரம்(60) என்பவர் மைசூரில் இருந்து 300 கிராம் கஞ்ச கடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News December 14, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள்,நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட உள்ளது. www.tnpcb.gov.in என்ற இணையதள முகவரியில் ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தகவல்.

error: Content is protected !!