News November 26, 2025
நீலகிரி: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News January 20, 2026
நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News January 20, 2026
நீலகிரியில் பயங்கரம்.. ஒருவர் அடித்துக் கொலை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பமூலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாரங்கமூலா பழங்குடியின கிராமத்தில் கோபி என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். டிஎஸ்பி கல்யாண் குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த விசாரணையில், இறந்தவரின் தங்கை மகன் சுதீஷ் என்பவர் மதுபானம் வாங்க பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மரக்கட்டையால் தாக்கி கோபியை கொன்றுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News January 20, 2026
நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)


