News October 1, 2025
நீலகிரி: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

குன்னூர்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், கேத்தி பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்டபவில்லை.
Similar News
News December 15, 2025
நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட அளவிலான வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை அரங்கத்தில், வரும் 18ம் தேதி, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. முகாமில், அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிகள் மூலம், மானியத்துடன் கூடிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 0423-2443947.
News December 15, 2025
நீலகிரி: இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.12.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.