News October 18, 2025

நீலகிரி கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்!

image

நீலகிரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 9, 2025

நீலகிரி: கன்றுகுட்டியை இழுத்து சென்ற ஆட்கொல்லி புலி!

image

முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனவல்லாவில் சமீபத்தில் ஆடுமேயத்த நபரை புலி தாக்கி கொன்றது. அந்த புலியை பிடிக்க, தானியங்கி கேமராக்களை வைத்தும், வனக்குழுக்கள் அமைத்தும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாவனல்லா குடியிருப்பை ஒட்டி தனியார் விடுதி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கன்றுக்குட்டியை புலி தாக்கி இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 8, 2025

நீலகிரி: இதை செய்தால் அபராதம்! எச்சரிக்கை

image

நீலகிரி: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவுப் பொருட்கள் பார்சல் செய்து கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News December 8, 2025

நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!