News March 26, 2024

நீலகிரி எல்லையோர ஒருங்கிணைப்பு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட எல்லையோரம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் உள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு மாநில மாவட்டங்களின் எல்லையோர நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் இன்று (மார்ச்.26) நடைபெற்றது. இதில், இரு மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 17, 2025

குன்னூர் பகுதியில் தடை அறிவிப்பு

image

குன்னூர் அருகே  லேம்ஸ்ராக்  மற்றும் டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலா  காட்சி முனை இடங்களுக்கு செல்லும் சாலையில் காங்கிரீட் சாலை பணிகள் நடைப்பெறுகிறது. அதனால்   சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர்  வாகனங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை  போக்குவரத்து  தடைவிதிக்கப்பட்டுள்ளது . அதையும்  மீறி செல்லும்  வாகனங்கள்  CMS  பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படும்.  இந்த சாலை பணி ஒரு வாரத்திற்கு  நடைபெறுகிறது.

News November 17, 2025

நீலகிரி: வாக்காளர் சிறப்பு முகாம் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், பாலகொலா ஊராட்சி தங்காடு கிராமத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) முகாமை இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை வாக்குபதிவு அலுவலர், கோட்டாட்சியர், உதவி வாக்குபதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உடன் சேர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டனர்.

News November 16, 2025

கோத்தகிரியில் ‘நம்ம கோத்தகிரி’ மாரத்தான் இலட்சினை வெளியீடு

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் நவ.26ஆம் தேதி கோத்தகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் ‘நம்ம கோத்தகிரி’ மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.
இருப்பினில், இந்த மாரத்தானுக்கான இலட்சினை (Logo) இன்று வெளியிடப்பட்டது. கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

error: Content is protected !!