News January 10, 2025
நீலகிரி: ஊரை தேடி காவலர் திட்டம் தொடக்கம்

நீலகிரி தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணிக்கொரை கிராம சமுதாய கூடத்தில் இன்று (10.1.25) மாலை 3.30 மணிக்கு ‘ஊரை தேடி காவலர்’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை கிராம மக்களின் நலன் கருதி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தொடங்கி வைக்கிறார். இதை எஸ்பி அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
அரசு பஸ் மீது கிரேன் மோதிய விபத்தில் 6 பேருக்கு காயம்

கோத்தகிரியில் இருந்து சுண்டட்டி செல்லும் சாலையில் எஸ்.கைகாட்டி ராஜ்நகர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கிரேன் மூலம் மரத்துண்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி மீது கிரேன் மோதியதில் கண்ணாடி உடைந்து கண்டக்டர் உள்பட பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.