News October 11, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News December 10, 2025
நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
News December 10, 2025
காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
தொட்டபெட்டா சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்குச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (டிசம்பர்.10) சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை ஒரு நாள் தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.


