News August 18, 2025
நீலகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நாளை (19.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் குஞ்சப்பனை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு, போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இசேவை, ஆதார் சேவை, மருத்துவ சேவை என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க உள்ளதால் இப்பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News December 10, 2025
காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
தொட்டபெட்டா சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்குச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (டிசம்பர்.10) சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை ஒரு நாள் தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.