News June 19, 2024

நீலகிரி: இடிந்து விழுந்த பள்ளிக்கூட தடுப்பு சுவர்

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரிய சோலை பகுதியில் நேற்று இரவு கனத்த மழை பெய்தது. இதில், பள்ளிக்கூடத்தின் தடுப்பு சுவர் இடிந்து ஒரு வீட்டின்  சமையலறை மேல் விழுந்தது. இந்நிலையில், இதனை நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா இன்று நேரில் பார்வையிட்டார் . ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. மேலும், பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 15, 2026

நீலகிரி மாவட்ட காவல்துறை பொங்கல் வாழ்த்து

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

News January 15, 2026

நீலகிரியில் குடும்பத்துடன் சென்ற வாகனம் விபத்து!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குறும்படி அருகே பொலிரோ வேன் விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, தாய் மற்றும் 2 குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த குன்னூர் போலீசார் மற்றும் ஹைவே ரோந்து படையினர் விரைந்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

நீலகிரி மக்களே உடனே SAVE பண்ணுங்க!

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!