News November 17, 2024

நீலகிரி: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு

image

தமிழகத்தில் அரசு அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு விட 2406 பேர் குறைவாக சேர்ந்துள்ளனர். இதற்கிடையே மேலும் ஒரு பிரச்சனையாக பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4000 தாண்டி விட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு.

Similar News

News December 10, 2025

நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்!

image

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

News December 10, 2025

காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

image

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 10, 2025

தொட்டபெட்டா சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்குச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (டிசம்பர்.10) சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை ஒரு நாள் தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.

error: Content is protected !!