News August 7, 2024
நீலகிரியில் ஹெச்.ராஜா பேட்டி

பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா நேற்று மாலை ஊட்டி YBA அரங்கில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடை பெற்றுள்ளன என குறிப்பிட்டார். இதில் மாநில பொதுச்செயலர் முருகானந்தம், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News December 9, 2025
நீலகிரி: கன்றுகுட்டியை இழுத்து சென்ற ஆட்கொல்லி புலி!

முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனவல்லாவில் சமீபத்தில் ஆடுமேயத்த நபரை புலி தாக்கி கொன்றது. அந்த புலியை பிடிக்க, தானியங்கி கேமராக்களை வைத்தும், வனக்குழுக்கள் அமைத்தும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாவனல்லா குடியிருப்பை ஒட்டி தனியார் விடுதி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கன்றுக்குட்டியை புலி தாக்கி இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
நீலகிரி: இதை செய்தால் அபராதம்! எச்சரிக்கை

நீலகிரி: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவுப் பொருட்கள் பார்சல் செய்து கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
News December 8, 2025
நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


