News April 13, 2024

நீச்சல் பயிற்சி வகுப்புகளில் சேர ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஜுன் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். 12 நாட்கள் பயிற்சிக்கு ரூ.1,770 கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 9659067172 , 04366-290620 என்கிற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

திருவாரூர்-திருச்சி கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை

image

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது காலை 8:15 மற்றும் மாலை 4:25 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை நடைபெறுகிறது என்றும், திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா உடன் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

திருவாரூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

திருவாரூர்: யூபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எஸ்.சி மற்றும் ஒபிசி மாணவர்களுக்கு மாதம் ரூ.4500 கல்வி உதவித் தொகையுடன் கூடிய, இலவச மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான (UPSC) பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (25.11.2025) இறுதி நாளாகும். மொத்தமுள்ள 100 இடங்களில் 70 இடங்கள் எஸ்சிக்கு, 30 இடங்கள் ஒபிசி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!