News November 22, 2024
நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்க அழைப்பு

தருமபுரி மாவட்ட விதை சான்றளிப்பு & உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மதியழகன் இன்று(நவ 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலக்கடலை கார்த்திகை பட்டமாக நவம்பர் & டிசம்பர் மாதங்களில் விதைப்பு செய்வது வழக்கம். எனவே,விதைப்பு செய்தவர்கள் விதைப்பண்ணையில் பதிவு செய்யலாம் என்றும், விவசாயிகளை ஊக்குவிக்க தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு 25 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
தருமபுரி: அரசு சான்றிதழுடன் DRONE பயிற்சி!

தமிழக அரசு, EDII மூலம், ட்ரோன் பயன்பாடு சிறப்பு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. வரும் நவ.18 முதல் நவ.20 வரை சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 11, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை போதை விழிப்புணர்வு பதிவு

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பதிவு இன்று (நவ.11) வெளியிடபட்டுள்ளது. அதில், ‘மேதையை அழிக்கும் போதையை ஒழிப்போம். போதையை தொடாது சாதனை படைப்போம். மதியை போக்கும் மதுவே போ.. போ..’ என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 11, 2025
தருமபுரி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


