News October 10, 2025
நாளை கிராம சபை கூட்டம்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “தமிழ்நாடு முழுவதும் நாளை (அக்.11) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி முதல்வர் பேசுவது, மாநிலம் முழுவதும் 10,000 கிராம பஞ்சாயத்துகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்” என கூறினார்
Similar News
News December 10, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
சென்னை: LIC அருகில் உள்ள பழைய கட்டடம் பற்றி தெரியுமா?

சென்னை, அண்ணா சாலை LIC அருகில் இருக்கும் இடிந்த கட்டடத்தை நம்மில் பலரும் பார்த்ததுண்டு. அதன் வரலாறு உங்களுக்கு தெரியுமா? 1868ல் சென்னை வந்த மருத்துவர் W.E.ஸ்மித் இந்த இடத்தில் 1897ல் மருந்து விற்பனையகத்தை அமைத்தார். அதுதான் நாம் பார்க்கும் தற்போதைய கட்டடம். இவர் இதனை 1925ல் ஸ்பென்ஸருக்கு விற்றுவிட, 1934-ல் பாரத் இன்சூரன்ஸ் கம்பெனி இதனை வாங்கியது. பின், இந்த பில்டிங் 1957-ல் LIC வசம் வந்தது. ஷேர்!
News December 9, 2025
சென்னை: பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதி

தமிழக பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ள நிலையில், இன்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


