News April 18, 2024
நாளை இலவச பேருந்து பயணம்

மக்களவைத் தேர்தல் நாளை 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் (ம) மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து செல்லலாம்.
Similar News
News November 13, 2025
திருப்பூர் மக்களே: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில், காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி ( PNB Local Bank Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் <
News November 13, 2025
திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், திருப்பூர் இடுவாய் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதிப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில், பால் கொடுக்கும் ஊருக்கு பால்டாயில் கொடுப்பதா? என்ற போஸ்டர்கள் கிராம மக்கள் சார்பில், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பொருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், முதியாநெரிச்சல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


