News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திண்டுக்கல்லில் மருத்துவர் கைலைராஜன் துரைராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 15, 2025

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

image

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் அறிவுரை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை “சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம்” என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர்.

News November 14, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர் 14) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!