News September 4, 2025
நாமக்கல்: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

▶️நாமக்கல் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News November 11, 2025
நாமக்கலில் பெண்கள் அதிரடி கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் அருகே உள்ள ஒரு வீட்டில் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை வசூல் செய்வதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து கைபேசி மற்றும் ரூ.1,000 பணம் திருடிய புவனேஸ்வரி(39) மற்றும் மீனா(25) இருவரையும் பரமத்தி போலீசார் கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
News November 11, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

அத்தனூர், வனவியல் விரிவாக்க மையம் சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் நிலங்களில் ஓராண்டுக்கு மேல் தரிசாக விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலங்களிலும், மற்ற விவசாயி நிலங்களின் வயல் முழுவதும், வரப்பு பகுதியிலும் மகாகனி, தேக்கு, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இன செடிகள் இலவசமாக நடவு செய்து தரப்பட உள்ளது. ஆகவே, ஆர்வமுள்ள விவசாயிகள் 8940133289, 9751051006 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
News November 10, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. எனவே, இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை (ம) தோட்டக்கலை அலுவலகத்தையோ (அ) பொது சேவை மையத்திலோ ஆதார் எண், சிட்டா, தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


