News April 30, 2024

நாமக்கல்: வெப்ப அலை தாக்கம்

image

தமிழ்நாட்டில் மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். மே 2ம் தேதிக்கு பின் வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 12, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழக அரசின் 2026- ஆம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விருதிற்கான விண்ணப்பம்(ம)முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான https://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் கூடிய ஒப்பம் பெற்று அரசுக்கு டிச.15-க்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

BREAKING: நாமக்கல்லில் வரலாறு காணாத விலை உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10 காசுகளாக நீடித்து வந்தது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.15- ஆக உயர்வடைந்துள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளது.

News December 12, 2025

நாமக்கல்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!