News August 8, 2025
நாமக்கல்: வங்கி அலுவலர் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே.., பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 12, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை கலந்து கொள்ளும் நிகழ்வு!

மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஷ் குமார் நாளை (நவ.13) காலை நாமக்கல் மாநகராட்சியில் தோழி விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மற்றும் பழையபாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.
News November 12, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.12) நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 12, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-12ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.75 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.


