News October 18, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பள்ளி மற்றும் கல்லூரில் படிக்கும் மாணவர்கள் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது என நூதன முறையில் பணம் திருட்டு தற்சமயம் நடைபெற்று வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி இருப்பு அல்லது Google Pay பற்றிய விவரங்களை தங்களுக்கு தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 11, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-11ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.70 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
News November 11, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த விபரம்

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாளை (12-11-2025) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள்; காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை வெண்ணந்தூர் பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அலுவலக கட்டிட திறப்பு விழா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், புதிய நிழற்கூடம் அமைத்தல், பட்டா வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
News November 11, 2025
உரம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும், உர உரிமம் புதுப்பிக்காமலோ எம்ஆர்பி-யை விட அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரங்கள் பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


