News August 19, 2024
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.96 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.92 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
Similar News
News January 13, 2026
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்லில் நாளை ( ஜனவரி.14) புதன் இரவு 07:45-க்கு பெங்களூரு, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக செல்ல உள்ளது. ஆகையால், ரயில் பயணிகள் இதனை பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News January 13, 2026
நாமக்கல்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News January 13, 2026
மல்லூர் – ராசிபுரம் சாலையில் பயங்கரம்!

சேலம் மாவட்டம், ஏர்வாடி அடுத்த எருமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் கொண்டான் (75). இவர் வெண்ணந்தூர் அருகே உள்ள மேற்கு வலசு பகுதியில் சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மல்லூர் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது பலமாக மோதியதில் கொண்டான் (75) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை!


