News August 22, 2025
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (22-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 90-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.99-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நீடித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
Similar News
News January 16, 2026
நாமக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 16, 2026
நாமக்கல் மக்களே நாளையே கடைசி தேதி!

எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் namakkal.nic.in என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 16, 2026
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிப்பாளையம் அருகே பூலக்காட்டூர் பகுதியை சேர்ந்த அருண் குமார்(28). இவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பள்ளிப்பாளையம் போலீசார், அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அருண்குமாரை, போலீசார் இரவு கைது செய்தனர். இவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


