News October 10, 2025
நாமக்கல்: நாளை அக்.10 முகாம் நடைபெறும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (10.10.2025) வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரப்பாளையம் நகராட்சி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, சீராப்பள்ளி பேரூராட்சி கொங்கு குலாலர் சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம், ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சனிக்கிழமை இன்று கனமழையும், மற்ற நாள்களில் லேசான மழையும் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 84.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 8, 2025
நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 8, 2025
நாமக்கல்லில் முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் 555 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 5 காசுகள் உயர்த்தப்பட்டு 560 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.100-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.106-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.


