News October 10, 2025

நாமக்கல்: தீபாவளி டிரெஸ் வாங்கப் போறீங்களா..?

image

நாமக்கல் மக்களே.., எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பலரும் ஆன்லைனில் டிரெஸ் எடுப்பது வழக்கம். இந்நிலையில், நடைபெறும் பல்வேறு ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து புகார் அளிக்கலாம். (SHARE IT)

Similar News

News November 11, 2025

எம்.பி ராஜேஷ்குமார் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த விபரம்

image

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாளை (12-11-2025) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள்; காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை வெண்ணந்தூர் பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அலுவலக கட்டிட திறப்பு விழா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், புதிய நிழற்கூடம் அமைத்தல், பட்டா வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

News November 11, 2025

உரம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும், உர உரிமம் புதுப்பிக்காமலோ எம்ஆர்பி-யை விட அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரங்கள் பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News November 11, 2025

நாமக்கல்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!