News June 18, 2024

நாமக்கல்: குடும்ப அட்டைகளை வழங்கிய ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெற ஏதுவாக 3 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கலந்து கொண்டு 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 15, 2026

நாமக்கல் மக்களே உடனே SAVE பண்ணுங்க!

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

நாமக்கல்லில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

நாமக்கல் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 15, 2026

நாமக்கல் மக்களே ஜன.17 கடைசி தேதி!

image

எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் namakkal.nic.in என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!