News October 18, 2025

நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் அரசு தரப்பில் மரியாதை!

image

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லம் உள்ளது இந்த நினைவு இல்லம் நூலகமாக செயல்பட்டு வருகிறது. அக்டோபர்-19ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கவிஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் துர்கா மூர்த்தி பங்கேற்கின்றனர்.

Similar News

News December 9, 2025

ராசிபுரம்: சிறுவனின் நெகிழ்ச்சி செயல்!

image

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே, வெள்ளை பிள்ளையார் கோவில் நெடுஞ்சாலையில் நடைபயணம் செய்துகொண்டிருந்த நடுப்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள், பாதையில் விழுந்திருந்த தங்க மோதிரத்தை பார்த்தனர். உடனே அதை தங்களிடம் வைத்துக் கொள்ளாமல், வெண்ணந்தூர் காவல் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் அவர்களிடம் ஒப்படைத்தனர். சிறுவர்களின் நேர்மையான செயலுக்கு காவல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து, வாழ்த்துகளை வழங்கினர்.

News December 9, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதாரம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 63803-69124 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News December 9, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!