News August 23, 2025
நாமக்கல்: கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும்!

பாச்சல், ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தொடக்கி வைத்து, மாணவர்களிடையே உரையாற்றிய ஆட்சியர் கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு முன்வர வேண்டும்” என கூறினார்.
Similar News
News January 21, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு (ஜனவரி 26) கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் தூய்மை பாரதம், ஜல் ஜீவன், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட 12 முக்கிய தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கூட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அழைப்பு!
News January 21, 2026
குமாரபாளையத்தில் பள்ளி மாணவன் விபரீத முடிவு!

குமாரபாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தீபேஷ் (17), படிப்புச் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் கதவை உடைத்து மீட்ட பெற்றோர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


