News November 14, 2025
நாமக்கல்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ? CHECK NOW

நாமக்கல் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 15, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (தனபால் – 9498115000) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 15, 2025
நாமக்கல் முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தில் நீடிக்கின்றது.
News December 15, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று டிசம்பர்-15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிடமிருந்து ஆட்சியர் துர்காமூர்த்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


