News April 9, 2024
நாமக்கல்: ஆர்.எம்.விக்கு மலர் அஞ்சலி

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் மறைவையொட்டி நாமக்கல்லில் எம்ஜிஆர் கழகத்தின் மாஜி மாவட்ட செயலாளர் வெள்ளையன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் எம்ஜிஆர் கழக நிர்வாகி பழனி பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சின்னசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News December 13, 2025
நாமக்கல்: வாக்காளர் திருத்த படிவம் கடைசி தேதி!

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட SIR வாக்காளர் திருத்த படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் படிவங்களை சமர்ப்பிக்க டிச.14ந் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை படிவங்களை சமர்ப்பிக்காத நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
News December 13, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.13) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), பள்ளிபாளையம் – (வெங்கடாசலம் – 9597406752) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 13, 2025
BREAKING: நாமக்கல்லில் புதிய உச்சம் தொட்ட விலை!

நாமக்கல்: முட்டை பண்ணை கொள்முதல் விலை இன்று (டிச.13) ரூ.6.20 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முட்டை விலை ரூ.6.15 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிகளவில் வாங்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. முட்டை தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளதால் விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


