News October 12, 2025
நாமக்கல் அருகே கிணற்றில் மிதந்த சடலம்!

நாமக்கல், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரப்பன். முன்னாள் பஞ்., தலைவர். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 45 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது. சம்பவ இடத்துக்கு நல்லிபாளையம் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 11, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 11, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-11ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக இதே விலை நீடித்து வருகிறது.
News December 11, 2025
நாமக்கல்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.


