News August 5, 2024
நாட்டுக்கோழி விலை சரிவு

நாமக்கல்லில் வாரந்தோறும் ஞாயிறு நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு பரமத்தி,கீரம்பூர். பாலப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.இந்த வாரம் கோழிகள் வரத்து அதிரித்ததால் அதன் விலை சரிந்தது. கடந்த வாரம் 1 கிலோ நாட்டுக்கோழி ரூ.500
விற்ற நிலையில் நேற்று விலை குறைந்து ரூ.400க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள், ஏமாற்றத்துடன் கோழிகளை திரும்ப கொண்டு சென்றனர்.
Similar News
News January 17, 2026
நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

நாமக்கல்லில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் தகவல் தெரிவிப்பு.
News January 17, 2026
நாமக்கல்லில் கோடிக்கணக்கில் மது விற்பனை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 169 டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. வழக்கமாக ரூ.4 கோடி வரை இருக்கும் விற்பனை, கடந்த 15-ம் தேதி மட்டும் ரூ.7.70 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், அரசு விழாவை முன்னிட்டு ஜேடர்பாளையம் பகுதியில் 11 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் இந்த சாதனை விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News January 17, 2026
குமாரபாளையத்தில் துணிகர சம்பவம்!

குமாரபாளையம் ராஜராஜன் நகரைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், செந்தில்குமார் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


