News November 19, 2025

நாகை: 4-வது நாளாக தொடரும் தடை!

image

நாகை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக 4-ஆவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

நாகை: பனைமரத்தில் பைக் மோதி இளைஞர் பலி – சோகம்

image

நாகூர் – ஆழியூர் சாலையில், வைரவனிருப்பு அம்மன் கோவில் அருகே பனைமரத்தில் மைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கீழ்வேளூர் அருகே மெடிக்கல் கடை நடத்தி வந்த விஜயகுமார்(29), சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் பைக் பின்னால் அமர்ந்து சென்ற அண்ணாதுரை(28) என்வர், படுகாயத்துடன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 20, 2026

நாகை: காதலியின் அப்பாவை தாக்கிய காதலன்

image

வேதாரணியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்வரின் மகளை அதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ்க்கும் கார்த்திகேயனுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனை தனுஷ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பாடி, வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

News January 20, 2026

நாகை: இன்று மின்தடை அறிவிப்பு!

image

நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல், நரிமனம் கீழ்வேளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து ம்ன் விநியோகம் பெறும் திட்டச்சேரி, திருமருகல், திருமங்கலம், நரிமனம் கீழ்வேளூர், ஆழியூர் மற்றும் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!