News October 19, 2025
நாகை: ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

நாகை ரயில்நிலையத்தில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் பேசும்போது, ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடைசெய்யப்பட்டு உள்ளது. எனவே பட்டாசு கொண்டு செல்வோர் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1000 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.
Similar News
News December 12, 2025
நாகை: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

நாகை: வகுப்பறையை திறந்து வைத்த அமைச்சர்

நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிதாக இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ருதி உடன் இருந்தார்.