News November 13, 2025
நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
நாகை: டெண்டர் முறைக்கேடு – அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு

நாகை மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ள கடைகளுக்காக ரூ.30.40 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், கடைகள் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், டெண்டர் அறிவிக்கப்பட்டது முறைகேடு என அதிமுக நகரச் செயலாளர் தங்கக் கதிரவன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 13, 2025
நாகை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
நாகை: 101 வயதான சமூக சேவகரை பாராட்டிய CM

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கூத்தூர் உழவனின் நில உரிமை இயக்க செயலாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். 101 வயதான இவரின் சமுக சேவை பாராட்டி மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம விபூசன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


