News October 18, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் சிரமங்கள், புகார்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் 1800-233-4233 அல்லது 81100 05558 என்ற பேரிடர் கால உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
நாகை மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர்,<
News November 11, 2025
நாகை: கடற்கரையில் கிடந்த பிணம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேளாங்கண்ணி போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
நாகை விவசாயிகளுக்கு ரூ.285.41 கோடி வரவு வைப்பு

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியில் இருந்து நவம்பர் 9ந் தேதி வரை 26,213 விவசாயிகளிடம் இருந்து 119953 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு. இதுவரை ரூ.285.41 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.


