News November 28, 2024

நாகை மாவட்டத்திற்கு தீவிர மழை எச்சரிக்கை

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) நாகை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!

Similar News

News November 12, 2025

நாகையில் மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா

image

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கன் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும்பணியை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட
செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 9 மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News November 12, 2025

நாகை: CM ஸ்டாலினை விமர்சித்தவருக்கு சிறை

image

தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை தவறாக விமர்சித்து, வாட்சப் மற்றும் முகநூலில் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் மீது, திமுக நிர்வாகி கொடுத்த புகாரில் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார்.

error: Content is protected !!