News November 29, 2024
நாகை மாவட்டத்திற்கு இன்று ‘ரெட் அலெர்ட்’

தென்கிழக்கு வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புயலானது நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், மணிக்கு 8 கீ.மி வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் இன்று நாகை மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 13, 2025
நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 13, 2025
நாகூர்: 100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி சந்தனக்கூடு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நவ.21-ம் தேதி முதல் டிச.1-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


