News August 9, 2025
நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
மாற்றத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நவ.17ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு காதொலி கருவி, 2 பேருக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.