News September 29, 2025
நாகை: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

நாகை மக்களே.. அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 18005991500 என்ற கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 10, 2025
நாகூரில் அமைச்சர் நாசர் பேட்டி

நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469வது ஆண்டு கந்தூரி விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆவடி நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர் விழாவிற்கு தமிழக அரசு 45 கிலோ சந்தன கட்டைகளை வழங்க உள்ளதாக நாசர் தெரிவித்தார். பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
News November 10, 2025
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News November 10, 2025
நாகை: விஏஓ கொலை; திருநங்கைகள் வாக்குமூலம்

நாகை செல்லூர் ஈசிஆர் சாலை அருகே விஏஓ ராஜாராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில், நிவேதா (20), ஸ்ரீகவி (19) எனும் இரண்டு திருநங்கைகளை நாகை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மது போதையில் இருந்த விஏஓ தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால், ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டுக் கொன்றுவிட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.


