News November 14, 2025

நாகை: புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவன தலைவர் கைது

image

கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி பகுதியை சேர்ந்தவர் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவன தலைவர் ஆனந்தராஜ் (53). இவர் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் பற்றி கேலி சித்திரம் பதிவிட்டு அவதூறாகவும், தவறாக சித்தரித்தும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர்.

Similar News

News December 9, 2025

மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் மண்டல அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்டு வெற்றி பெற்றமைக்காக வழங்கப்பட்ட கோப்பைகள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷிடம் மாணவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News December 9, 2025

நாகை: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 9, 2025

நாகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

நாகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!