News November 25, 2025

நாகை: நாளை வெளுத்து வாங்க போகும் மழை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..

Similar News

News January 18, 2026

நாகை : உச்சத்தை தொட்ட விற்பனை – மக்கள் அதிர்ச்சி

image

நாகை மாவட்டத்தில் 52 டாஸ்மாக் மதுக்கடைகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 டாஸ்மாக் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களில் மட்டும் ரூ.15 கோடியே 21 லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட ரூ.5.87 கோடி அதிகமாகும். இதுகுறித்து உங்க கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!

News January 18, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வரும் ஜன.20-ம் தேதி பொதுமக்களுக்கான குரல் ஒப்புவித்தல் போட்டி , குரல் சார்ந்த ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. குரல் ஒப்புவித்தல் போட்டியில், ஒப்புவித்த குறள்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் 8754828470 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 18, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று(ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!