News March 25, 2024
நாகை: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

நாகை மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு பல நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்சிடம் வழங்கினார். இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், அகஸ்டின், அற்புதராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
நாகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

நாகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
நாகை: ரயில் சேவை ரத்து

நாகை வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு–காரைக்கால் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் ரயில் எண் 16239 (பெங்களூரு–காரைக்கால்), 16240 (காரைக்கால்–பெங்களூரு) ஆகிய ரயில்கள் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாகை: கடைசி தேதி அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா தாளடி நெற்பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தின் அடங்கல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகிய ஆவணங்களை காப்பீட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


